நேற்று நான் சாப்பிட்டேன்

I ate yesterday

eat ate eaten

நேற்று நான் சாப்பிட்டேனா?

Did I eat yesterday?

did+eat=ate

இல்லை, நேற்று நான் எதுவும் சாப்பிடவில்லை

No, I did not eat anything yesterday

did+eat=ate

பொய் சொல்லாதே, நேற்று நீ சாப்பிட்டதை நான் பார்த்தேன்

Don't lie, I saw you eating yesterday

மன்னிக்கவும், நான் அதை மறந்துவிட்டேன்

Sorry, I forgot that

நீங்கள் எனக்கு ஞாபகப்படுத்தியதற்கு நன்றி

Thank you for reminding me

ஆமாம், நேற்று நான் பிரியாணி சாப்பிட்டேன்

Yes, I ate biryani yesterday

did+eat=ate

பிரியாணி எப்படி இருந்தது?

How was the biryani?

நன்றாக இருந்தது

It was good

உனக்குப் பிடித்திருந்ததா?

Did you like it?

எனக்குப் பிடித்திருந்தது அனால், கொஞ்சம் காரமாக இருந்து

I liked it but, it was a bit spicy

உனக்கு காரமான சாப்பாடு பிடிக்காதா?

Don't you like spicy food?

அப்படி இல்லை, ஆனால் வழக்கத்தை விட காரமாக இருந்ததாக உணர்ந்தேன்

Not like that but, I felt like it was spicier than usual

காரமாக இல்லாமல் இருந்திருந்தால் நான் இன்னும் கொஞ்சம் அதிகமாக சாப்பிட்டிருப்பேன்

I would have eaten some more if it was not spicy

இப்போதெல்லாம் நான் அதிகமாக பிரியாணி சாப்பிடுகிறேன், நான் அதை குறைக்க வேண்டும்

I eat more biryani these days, I should reduce it

நீ அடிக்கடி பிரியாணி சாப்பிடுகிறாயா?

Do you eat biryani often?

ஆமாம், நான் அடிக்கடி பிரியாணி சாப்பிடுகிறேன்

Yes, I eat biryani often

நீ எத்தனை முறை பிரியாணி சாப்பிடுகிறாய்?

How often do you eat biryani?

நான் வாரத்திற்கு நான்கு முறை பிரியாணி சாப்பிடுகிறேன்

I eat biryani four times a week

அப்படியா, உன்னுடைய அபிமான பிரியாணி எது?

Is it, which is your favourite biryani?

மட்டன் பிரியாணி தான் என்னுடைய அபிமான பிரியாணி

Mutton biryani is my favourite biryani

பிரியாணிக்காக நீ எவ்வளவு செலவு செய்கிறாய்?

How much do you spend for biryani?

நான் ஒரு மாதத்திற்கு பிரியாணிக்கு ஏறத்தாழ 5௦௦௦ ருபாய் செலவு செய்கிறேன்

I spend around Rs. 5000/- for biryani per month

அதன் விளைவாக, நான் கொஞ்சம் எடை கூடி இருக்கிறேன்

As a result, I have put on some weight

அதனால், நான் எனது எடையைக் குறைக்க முடிவு செய்தேன்

So, I decided to reduce my weight

எடையைக் குறைக்க எனக்குப் பரிச்சயமானவர்களில் ஒருவர் அவரைக்காய் சாப்பிட சொன்னார்

One of my acquaintances told me to eat flat beans to lose weight

சென்ற வாரத்திலிருந்து நான் அவரைக்காய் சாப்பிட ஆரம்பித்தேன்

I started eating flat beans from last week

எப்படி சாப்பிட்டாய்?

How did you eat?

did+eat=ate

நான் வேகவைத்து சாப்பிட்டேன்

I boiled and ate

உனக்கு ஏதாவது வித்தியாசம் தெரிகிறதா?

Do you witness any change?

என்ன விளையாடுறீங்களா?

Are you kidding?

ஒரே வாரத்துல எனக்கு எப்படி வித்தியாசம் தெரியும்?

How do I witness change within a week?

பலன் கிடைக்க கொஞ்ச நாள் ஆகும்

It takes time to see the result

நான் தினமும் பீர்கங்காயும் சாப்பிடுகிறேன்

eat ate eaten

I also eat ridge gourd daily

பீர்க்கங்காயில் நார் சத்து அதிகமாக உள்ளது

Ridge gourd is rich in fiber

உனக்கு எப்படி அது தெரிய வந்தது?

How did you get to know about that?

சென்ற மாதம் நான் அதை ஒரு கட்டுரையில் படித்தேன்

I read it in an article last month

read read read

உனக்கு வாசிக்கும் பழக்கம் உள்ளதா?

Do you have the habit of reading?

நீங்கள் ஏன் இந்த கேள்வியை கேட்கிறீர்கள் என்று எனக்கு தெரியும்

I know why you are asking me this question

நீங்கள் சொல்வதை நான் ஒத்துக்கொள்கிறேன்

I agree with you

பள்ளியில் நான் ஒரு சுமாரான மாணவனாக இருந்தேன் ஆனால் இப்போது இல்லை

I was a mediocre student in school but not now

இதை உன்னிடமிருந்து கேட்பதற்கு சந்தோசமாக இருக்கிறது

It's happy to hear this from you

உன்னுடைய நம்பிக்கை எனக்கு பிடித்திருக்கிறது

I like your confidence

அவன் யார்?

Who is he?

அவன் எனது நண்பன்

He is my friend

அவனை எப்படி நீ நண்பனாக்கினாய்

How did you befriend him?

முதல் முறை கல்லூரியில் சந்தித்தபோது நாங்கள் பரிச்சயமில்லாதவர்களாத்தான் இருந்தோம்

We were strangers when we first met in college

நாளடைவில் நாங்கள் நண்பர்கள் ஆனோம்

We became friends in course of time

அவன் பிரியாணி சாப்பிட்டானா?

Did he eat biriyani?

இல்லை, அவன் பிரியாணி சாப்பிடவில்லை

No, he didn't eat biryani

அவன் ஏன் பிரியாணி சாப்பிடவில்லை?

why did he not eat biryani?

அவன் பிரியாணி சாப்பிட கூடாது

He should not eat biryani

ஏன், அவனுக்கு என்னாச்சு?

why, what's wrong with him?

டாக்டர் அவனை எண்ணெய் உணவை தவிர்க்க சொல்லியிருக்கிறார்

Doctor has told him to avoid oily food

ஏனென்றால் அவனுக்கு இரைப்பை அழற்சி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது

Because, he is diagnosed with gastritis

சரி, அவன் என்ன சாப்பிட்டான்?

Okay, what did he eat then?

அவன் தயிர் சாதம் சாப்பிட்டான்

He ate curd rice

பாவம் அவனால் பிரியாணி சாப்பிட முடியவில்லை

It's a pity he could not eat biryani

அவன் என்னை சபித்திருப்பான்

He would have cursed me

அவன் ஏன் உன்னை சபிக்க வேண்டும் ?

Why should he curse you?

ஏனென்றால் அவனுக்கு அங்கு வர விருப்பமில்லை

Because he was not interested to come there

அவனை என்னுடன் வர நான் தான் வற்புறுத்தினேன்

I only forced him to come with me

நான் அவனிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்

I should apologize to him

உன்னுடைய மன்னிப்பை அவன் ஏற்றுக்கொள்வானா?

Will he accept your apology?

ஆமாம் நிச்சயமாக, அவன் ஒரு மகிழ்ச்சியான பையன்

Yes definitely, he is a jovial guy

அவன் இதையெல்லாம் விளையாட்டாக எடுத்துக்கொள்கிறேன்

He takes these things sportively

பிரியாணி சாப்பிட்டபிறகு அவனால் மருந்து சாப்பிட்டிருக்க முடியும் ஆனால் அவன் சாப்பிடவில்லை

He could have taken medication after eating biryani but he didn't eat

அவனை அவன் கட்டுப்படுத்திக்கொண்டான்

He controlled himself

அவனுடைய சுய கட்டுப்பாடு என்னை வியப்பில் ஆழ்த்தியது

His self control astonished me

அவனைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

What do you think of him?

அவன் கண்ணியமான பையனாகத் தெரிகிறான்

He looks decent

நீங்கள் சொன்னது மிகவும் சரி

You are exactly correct

அவனிடம் எந்த கெட்ட பழக்கமும் கிடையாது

He doesn't have any bad habits

அவன் எளிதில் கோபமடைவதில்லை

He doesn't get angry easily

ஆனால், நீங்கள் அவனுடைய பொறுமையை சோதித்தால் யாராலும், உங்களை காப்பாற்ற முடியாது

But, if you test his patience, no one can save you

அவன் யாரிடமும் பணம் கடன் வாங்குவதில்லை

He doesn't borrow money from anyone

அவனுக்கு பதினைந்து வயது இருக்கும்போது அவனது அப்பா இறந்துவிட்டார்

His father died when he was 15

அவனது அப்பாவிற்கு கொஞ்சம் கடன் இருந்தது

His father had some debts

அவன் குடும்பத்தை காப்பாற்ற பகுதி நேரமாக வேலை செய்ய ஆரம்பித்தான்

He started working part-time to take care of his family

அவன் பணத்தை சேமித்து அவனது அப்பாவின் கடன்களை அடைத்தான்

He saved money and settled all his father's debts

அவனது அம்மாவும் அவனுக்கு உதவினார்கள்

His mother also helped him

அவனுடைய குடும்பம் தான் அவனுக்கு எல்லாமே

His family is everything to him

அவன் அவனது குடும்பத்தைக் காப்பாற்ற எது வேண்டுமானாலும் செய்வான்

He will do anything to save his family

இப்போது நானும் அவனது குடும்பத்தில் ஒரு அங்கம் வகிக்கிறேன்

I am also a part of his family now

அவன் மிகவும் இனிமையானவன்

He is so sweet

அவன் பெரியவர்களை மதிக்கிறான்

He respects elders

அவன் எங்கு சென்றாலும் என்னை அவனுடன் கூட்டிச்செல்கிறான்

He takes me with him wherever he goes

அவன் குழந்தைகள் மீது மிகவும் பிரியம் கொண்டவன்

He is very fond of children

மற்றவர்கள் அவனை அணுகும்போது அவர்களுக்கு அவன் உதவி செய்கிறான்

He helps others when they approach him

அவன் யாரையும் எதற்காகவும் பகைத்துக்கொள்வதில்லை

He never antagonizes anyone for anything

அவன் அவனது பள்ளித்தோழர்களில் ஒருவனால் ஏமாற்றப்பட்டான்

He was cheated once by one his school friends

அவன் அவனை பழி தீர்க்க ஒரு வாய்ப்பு கிடைத்தது

He got a chance to take revenge on him

அவன் அவனை பழிதீர்த்திருக்க முடியும்

He could have taken revenge on him

ஆனால் அவன் அவனை விட்டுவிட்டான்

But he spared him

பிறகு அந்த நண்பன் தன் தவறை உணர்ந்து அவனிடம் மன்னிப்பு கேட்டான்

Then that friend realized his mistake and apologized to him

அவனை அவன் மன்னித்தான்

He forgave him

அவன் ஒரு சிவ பக்தன்

He is a devotee of lord Siva

அவன் தினமும் தியானம் செய்கிறான்

He meditates everyday

அவனுக்கு ஒரு தம்பி இருக்கிறான் ஆனால் அவன் இவனுக்கு நேர் எதிர்

He has an younger brother who is exact opposite to him

அவனுடைய தம்பி ஒரு முன்கோபி

His brother is a short tempered guy

நேற்று கூட ஒரு ஆளுடன் கைகலப்பில் ஈடுபட்டிருந்தான்

Even yesterday he was involved in a scuffle with a man

அதை தவிர்த்து அவனும் நல்ல பையன் தான்

Except that he is also a good guy

நாளை நான் மீன் சாப்பிடுவேன்

eat ate eaten

I shall eat fish tomorrow

நேற்று நான் நெருப்பின்றி சமைத்தேன்

I cooked without fire yesterday

நான் நடந்தேன்

I walked

walk walked walked

நான் தூங்கினேன்

I slept

sleep slept slept

நான் எழுதினேன்

I wrote

write wrote written

நான் விளையாடினேன்

I played

play  played played

நான் திட்டினேன்

I scolded

Scold scolded scolded

நான் சமைத்தேன்

I cooked

cook cooked cooked

நான் யோசித்தேன்

I thought

think thought thought

நான் விழுந்தேன்

I fell

fall fell fallen