எனது நண்பன் என்னை பாதுகாக்கலாம்

My friend may protect me

நான் எனது நண்பனை பாதுகாத்திருக்கலாம்

I might have protected my friend

நீ என்னை கைவிடலாம்

You may abandon me

நீ என்னை கைவிட்டிருக்கலாம்

You might have abandoned me

அவர்கள் போராடலாம்

They may protest

அவர்கள் போராடியிருக்கலாம்

They might have protested

அவள் தற்புகழ்ச்சி செய்யலாம்

She may boast

அவள் தற்புகழ்ச்சி செய்திருக்கலாம்

She might have boasted

குழந்தை கிறுக்கலாம்

The child may scribble

குழந்தை கிறுக்கியிருக்கலாம்

The child might have scribbled

தாய் குழந்தையை தழுவலாம்

The mother may embrace the child

தாய் குழந்தையை தழுவியிருக்கலாம்

The mother might have embraced the child

அவன் எனது தலையில் குட்டலாம்

He may whack me on my head

அவன் எனது தலையில் குட்டியிருக்கலாம்

He might have whacked me on my head

மக்கள் குவியலாம்

People may throng

மக்கள் குவிந்திருக்கலாம்

People might have thronged

மாணவர்கள் அப்படி சித்தரிக்கலாம்

The students may portray like that

மாணவர்கள் அப்படி சித்தரித்திருக்கலாம்

The students might have portrayed like that

நாங்கள் பயணிக்கலாம்

We may commute

நாங்கள் பயணித்திருக்கலாம்

We might have commuted