என்னுடைய அம்மா என்னை மளிகை கடைக்குப் போக சொன்னாங்க

My mom told me to go to the grocery shop

ஆரம்பத்தில் நான் போக மறுத்தேன்

Initially I refused to go

எனக்கு ஐம்பது ரூபாய் கமிசன் தரேன்னு சொன்னாங்க

She offered me fifty rupees commission

நான் ஒரு நொடி யோசிச்சேன்

I thought for a second

என்கிட்டே சல்லி பைசா இல்ல

I didn't even have a penny

அதனால நான் ஒத்துக்கிட்டேன்

So I agreed

எனக்கு போக விருப்பம் இல்ல

I did not like to go

ஆனா, எனக்கு வேற வழி இல்ல

But, I did not have any other way

அவங்க என்கிட்ட ஐநூறு ருபாய் குடுத்தாங்க

She gave me five hundred rupees

நெறைய பொருட்கள் வாங்க வேண்டி இருந்தது

There were many things to buy

நான் ஒரு பேனா எடுத்து ஒரு பேப்பர்ல எழுதஆரம்பிச்சேன்

I took a pen and started writing on a paper

நீங்க என்ன கேக்க போறீங்கன்னு எனக்கு புரியுது

I understand what you are going to ask

என்னோட போன் சார்ஜ் ஏறிட்டு இருந்தது

My phone was charging

அதனால என்னோட போனை எடுத்துட்டு போக முடியல

So I could not carry my mobile

அவங்க ஒன்னு ஒன்னா என்கிட்ட சொன்னாங்க

She told me one by one

நான் எல்லாத்தையும் எழுதிகிட்டேன்

I wrote down everything

நூறு கிராம் மஞ்சள் பொடி

Turmeric powder hundred grams

அரை கிலோ அவல்

Rice flake half kilogram

கால் கிலோ கொள்ளு

Horse gram quarter kilogram

ஒரு கிலோ புடலங்காய்

Snake gourd one kilogram

கடுகு நூறு கிராம்

Mustard seeds hundred grams

சீரகம் நூறு கிராம்

Cumin seeds hundred grams

வெந்தயம் நூறு கிராம்

Fenugreek seeds hundred grams

கருவேற்பில்லை ஒரு கொத்து

A bunch of curry leaves

கொத்தமல்லி தழை ஒரு கொத்து

A bunch of coriander leaves

நான் அஞ்சு நிமிசத்துல கடைக்கு போய்ட்டேன்

I reached the shop in five minutes

கடைல யாருமே இல்ல

Nobody was there in the shop

அஞ்சு நிமிஷம் கழிச்சு கடைக்காரர் வந்தார்

The shop keeper came after five minutes

நான் அவர்கிட்ட அந்த பேப்பர கொடுத்தேன்

I gave him that paper

அவர் எல்லா பொருளையும் எடுத்துக் டுத்தார்

He took all the things and gave me

நான் வாங்கிக்கொண்டேன்

I got them

அவர் கணக்குப்போட்டு நானூற்று ஐம்பது ருபாய் என்று என்னிடம் சொன்னார்

He calculated and told me that it was four hundred and fifty rupees

நான் பேரம் பேசி பத்து ருபாய் குறைத்தேன்

I bargained and reduced ten rupees

நான் அவரிடம் ஐநூறு ருபாய் குடுத்தேன்

I gave him five hundred rupees

அவர் அறுபது ருபாய் திருப்பிக் கொடுத்தார்

He gave me sixty rupees back

பிறகு நான் வீட்டுக்குச் சென்றேன்

Then I went home