எங்கள் பகுதியில் ஒரு சின்ன பையன் இருக்கிறான்

There is a small boy in our area

அவன் பெயர் விக்னேஷ்

His name is Vignesh

அவனுக்கு பதினோரு வயது ஆகிறது

He is eleven years old

அவனுடைய அப்பா ரஞ்சித் ஒரு மென்பொருள் பொறியாளராக இருந்தார்

His father Ranjith was a software engineer

விக்னேஷுக்கு ஏழு வயது இருக்கும்போது ரஞ்சித் ஒரு விபத்தில் சிக்கினார்

Ranjith met with an accident when Vignesh was seven years old

ரஞ்சித் விபத்து நடந்த இடத்திலேயே உயிரிழந்தார்

Ranjith died on the spot

அவனது அம்மா சுமித்ரா ஒரு அரசு ஊழியர்

His mother Sumithra is a government employee

சுமித்ரா சுங்கத்துறையில் வேலை செய்கிறார்

Sumithra works in customs department

அவர் ஒரு நேர்மையான அதிகாரி

She is an honest officer

அவர் பதின்மூன்று ஆண்டுகளாக இந்த துறையில் வேலை செய்கிறார்

She has been working in this department for thirteen years

நிறைய பேர் அவரிடம் லஞ்சம் கொடுக்க முயற்சி செய்தார்கள்

Many people tried to bribe her

ஆனால் ஒருவர் கூட அந்த முயற்சியில் வெற்றிபெறவில்லை

But nobody succeeded in that attempt

அவரது கணவர் ரஞ்சித் இறக்கும்போது அவரது வயது வெறும் இருபத்தொன்பது தான்

She was just twenty nine when her husband died

அவர் மறுமணம் செய்துகொள்வதில்லை என்று முடிவெடுத்தார்

She decided not to remarry

அவர் விக்னேஷ் மீது அதிக கவனம் செலுத்த ஆரம்பித்தார்

She started focusing more on Vignesh

விக்னேஷ் ஒரு சுட்டி பையனாக இருந்தான்

Vignesh was a naughty boy

அவன் படிப்பில் சுமாராக இருந்தான்

He was mediocre in studies

ஆனால் நன்றாக விளையாடினான்

But he played well

அவன் நன்றாக நீந்தினான்

He swam well

சுமித்ராஅவனை ஒரு நீச்சல் பயிற்சி மையத்தில் சேர்த்தார்

Sumithra admitted him to a swimming academy

ஒரு நல்ல பயிற்சிக்குப் பிறகு விக்னேஷ் மாநில அளவிலான ஒரு போட்டியில் பதக்கம் வென்றிருக்கிறான்

After a good training he has won a medal in a state level competition

விக்னேஷ் இதுபோன்ற பல பதக்கங்களை வெல்ல நாம் பாராட்டுவோம்

Let us appreciate Vignesh to win many such medals